மஞ்சள் காமாலையின் காரணங்களும் மருத்துவமும்


♡ வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.

♡ இந்த பிலிரூபின் மலம்இ சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.


♡ கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.


♡ மது அருந்துவதாலும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.


♡ வைரஸ்  மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை அசுத்தமான நீரையும் ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.



♡ சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.



♡ வைரஸ்  மற்றும் ’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.



மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் முறைகள் :



♡ மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.



♡ எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கைகளைக் கழுவ வேண்டும்.



♡ சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.



♡ காய்கறிகள் பழங்களை சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.



♡ கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.



♡ கழிவறையைப் பயன்படுத்திய பின் சிறுநீர் கழித்த பின் கைகளை கிருமி நாசினி பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும்.



♡ நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.



♡ நேரத்திற்க்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.



♡ நண்பர்கள் உறவினர்கள் என மற்றவர்களின் ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.



♡ எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
-
 இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.


மஞ்சள் காமாலை வந்தபின் காக்கும் முறைகள் :



♡ மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.



♡ சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



♡ சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும் ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



♡ கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.



♡ கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.



♡ உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.

உணவு முறைகள் :



தவிர்க்கவேண்டிய உணவுகள் :



♡ காரமான மசாலா உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



♡ மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது.



♡ முட்டையின் மஞ்சள் கரு அதிக புரதம் உள்ள பருப்பு சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மஞ்சள் காமாலை நோய்க்கு தேவையான பரிசோதனைகள்

மஞ்சள் காமாலை நோய்க்கு தேவையான பரிசோதனைகள் :



♡ ரத்தத்தில் மொத்த பிலிருபின் தனித்த பிலிருபின் இணைந்த பிலிருபின் ஆல்புமின் குளோபுலின் எவ்வளவு உள்ளன என்று கணிக்கும் பரிசோதனை இது.



♡ ஏ.எல்.பி ஏ.எஸ்.டி.  ஏ.எல்.டி. ஜி.ஜி.டி.  பரிசோதனைகளும் செய்யப்படும். ரத்தத்தில் என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.



♡ ஹெச்பிஎஸ்.ஏஜி.  பரிசோதனையில் காமாலையின் வைரஸ் வகையை அறிய முடியும்.



♡ கல்லீரல் வீக்கத்தைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சி.டி. ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.




♡ இந்தப் பரிசோதனைகளை எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். முன் ஏற்பாடு எதுவும் தேவையில்லை.


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------