This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!



நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்: கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்: எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்: வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்: நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்: எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை: சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

பள பள அழகு தரும் பப்பாளி

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். 

வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. 
முகம் பளபளப்பாக மாறணுமா? 
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 

1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். 

2. இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். 

3. சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். 

4. இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. 
எப்படி என்கிறீர்களா? 
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். 

இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும. 
*** 
கருவளையமா? 
ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது. 
*** 
இதற்கு என்ன செய்ய வேண்டும்? 
சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள். 
*** 
சிவப்பழகு வேண்டுமா? 
பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்... 

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! 
இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். 
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும். 
*** 
வெண்பிஞ்சு பாதங்கள்! 

பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். 
உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும். 
டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள். 
இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள். 
அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: 

தேங்காய்க் கீற்று - 2 
வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன் 

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும். 

'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!



'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!
வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 


















தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

 இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும்.

 கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும். பழக்கூழ் பேஷியல் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும். பிசுபிசுப்பு நீங்க முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.