முகப்பரு எதனால் வருகிறது போக்குவது எப்படி


பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்றஇயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண்இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில்பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.எப்படி என்பதை இப்போதுபார்ப்போம்:

  முகப்பருவைப் போக்கவும், தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடிகழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள்உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்றஅழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர்பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன.அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்

முகப்பரு நீங்க

* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.

* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.

* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------