This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும்: ஆய்வில் தகவல்

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும்: ஆய்வில் தகவல்

 மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
 
கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.
 
அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சளித்தொல்லையிலிருந்து விடுபட

                                       சளித்தொல்லையிலிருந்து விடுபட


சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை. அதனால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீர சில வீட்டு  மருத்துவ குறிப்பை பார்ப்போம். 


1) குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை 5 அல்லது 6 என்ற அளவில் எடுத்து  கழுவி ஒரு தவாவில் வைத்து வதக்கி  பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

2) குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர சளி குறையும்.

3) மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகப்படியான சளியினால் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை  இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் வாந்தி வரும், இதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும்.  இதனால் சளி குறைவதோடு மூச்சு விட சுலபமாக இருக்கும். 
  
4) பெரியவர்களுக்கு தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.

5) சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும், அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக பருகவும்.  இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் தீரும்.

பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ பயன்


                               


 

 இன்றைய காலகட்டத்தில் சில பெண்களுக்கு தாய்மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிலருக்கு மருந்து மாத்திரை மற்றும் சிகிச்சைகளால் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி வருவது உண்டு.

பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. 

இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். 

இதற்கான எளிய தீர்வுண்டு. 

நாம் அன்றாடம் சமயலறையில் இருக்கும் எளிய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது. 

பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து , ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

செவ்வாழை ரகசியம்

செவ்வாழை ரகசியம்



 எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

பயனுள்ள வீட்டு மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள வீட்டு மருத்துவக் குறிப்புகள்


* முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வெயில் சூட்டினால் வயிற்று வலி  வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு  சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து விடும். ரோஜா இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும். வாய் மணக்கும்.

* இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும்.
மாங்காய் ஸ்கர்வி நோயை விரட்டுகிறது.

* மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக் கூடியது. பட்டுப்புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒருமுறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ‡ஏ க்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ‡ ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக் கீரை, அகத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
வெப்பத்தால் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.


* உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீர் நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது. வேர்க்கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். மண் பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது.

* மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்துமிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா கதைக் குடையக்கூடாது. சாப்பிட்டதும் குண்டூசி அல்லது குச்சிகளைக் கொண்டு பற்களைக் குத்தக் கூடாது. அப்படிக் குத்தும்போது பல்லின் எனாமல்பாதிக்கப்படுவதோடு, ஈறுகளில் காயம் ஏற்படும். மேலும் பற்களைத் தொடர்ந்து குடைவதால் பற்களின் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி நாளடைவில் பல் பழுதுபட வாய்ப்பு ஏற்படும். மூக்கின் வழியாக வெளிப்பொருட்கள் நுழைந்தால் அவற்றை வெளியேற்றக்கூடிய அனிச்சை செயல் தான் தும்மல். மற்றபடி ராசியான தும்மல், ராசி இல்லாத தும்மல் என்று எதுவுமில்லை.

* கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் ஆகியவை முக அழகிற்கு ஆரோக்கியமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது.  தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து, சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.