மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்


♡ மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்இ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம்.

♡ குடலில் ஏற்படும் கட்டிஇ புற்றுநோய்இ அடைப்புஇ நீண்ட காலக் குடலிறக்கம்இ மூலநோய்இ முதலிய நோய்கள் மலச்சிக்கலுக்கு காரணமாகும்.

♡ தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல்இ உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல்இ பொட்டாசியம் குறைதல்இ மனச் சோர்வு ஆகியவையும் காரணமாகும்.

♡ உணவுமுறையில் மாற்றம்இ குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவதுஇ தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை.

♡ இரும்புஇ சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள்இ உடல் உழைப்பின்மைஇ அதிக மனஅழுத்தம்இ மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வதுஇ பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால்இ கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.

♡ சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....
மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.