பல் சொத்தை ஏற்படக் காரணங்கள் :


♡ பல் பாதிப்புகளில் முதன்மையானது பல் சொத்தை. இது குழந்தைகள்இ இளம் வயதினர்இ முதியோர் என எல்லோரையும் பாதிக்கின்றது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்இ இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாகஇ பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள்இ பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போதுஇ வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்துஇ லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றது. இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
♡ சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டுஇ நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால்இ பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போதுஇ பற்களில் துவாரங்கள் ஏற்பட்டுஇ பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டுஇ வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்
♡ குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கிஇ சொத்தையை ஏற்படுத்திவிடும்.
பல் சொத்தையை வராமல் தடுக்கும் முறைகள்
...................................................................................
♡ பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும்.
♡ பல் தேய்த்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
♡ இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
♡ நார்ச்சத்துஇ கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
♡ சாப்பிட்டபின் வாயை நல்ல தண்ணீரில் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
.................................................................................
பல் சொத்தை வந்தபின் காக்கும் முறைகள்
♡ ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால்இ பல் சொத்தை பாதிப்பு ஆழமாகிஇ வேரையும் பாதிக்கும். பல் வலி ஏற்படும் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும்.
♡ மேலோட்டமாகஇ எனாமல் பாதிப்பு இருந்தால்இ பாதிப்பு பகுதியை சுத்தம் செய்துவிட்டுஇ நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம்.ஆழமாக ஓட்டை இருந்தால்இ தற்காலிக அடைப்பு என்ற முறையில்இணுழந எனப்படும்இ சிமென்ட்டால் அடைப்பதால்இ மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
....................................................................................
உணவு முறைகள்:
♡ திராட்சை
♡ வெள்ளரி
♡ கேரட்
♡ தானியங்கள்
♡ உலர் திராட்சைகள்
♡ கடல் உணவுகள்
♡ இனிப்பில்லாத சூயிங் கம்
♡ புதினா இலைகள்
..................................................................................
பல் சொத்தை சிகிச்சைகள் :
♡ முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால்இ ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.
♡ எனாமல்இ டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால்இ வேர் சிகிச்சை என்று அழைக்கப்படும் ரூட் கனால் சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
பல் சொத்தை பாதுகாப்பு முறைகள்:
♡ சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
♡ தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
♡ மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
♡ பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம்.
♡ பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும்.
♡ குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
♡ மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
♡ இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
♡ பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும்.
♡ கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....
மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.